கீழக்கரையில் அல்முஸல்லா பலாஹ் -அல்மத்ரஸத்துல் பலாஹ் திறப்பு விழா
08/12/08 அரஃபா தினம் அன்று கீழக்கரை நடுத்தெருவில் அல் முஸல்லா பலாஹ் , அல் மத்ரஸத்துல் பலாஹ் - பெண்கள் தொழுமிடம் , பெண்கள் மத்ரஸாவை மர்ஹும் மவ்லவி ஏ.எம்.எஸ். அப்துல் கரீம் ஆலிம் அவர்களின் புதல்வி ஹாஜி ஏ..எம்.எஸ்.முகைதீன் பாத்திமா நிர்மாணம் செய்தார்.
திறப்பு விழா நிகழ்ச்சியின் தொடக்கமாக ஹாபிழ் ஏ.எம்.கே.செய்யித் அஹ்மது நெய்னா கிராஅத் ஓதினார்
அல்ஹாஜ் ஏ.எம்.எஸ் முஸ்தபல் காதிரி தமது சகோதரி முகைதீம் பாத்திமா சார்பில் , புதிதாக நிர்மாணம் செய்த முஸல்லாஹ் பலாஹ் ,அல் மத்ரஸத்துல் பலாஹ்க்கான அறிவிப்பை செய்து அனைவரையும் வரவேற்றார்
நிகழ்ச்சிக்குத்தலைமை வகித்த டவுன் காஜி அல்ஹாஜ் ஏ.எம்.எம் .காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீக்கீ , தொடக்கிவைத்து ஆற்றிய தமது உரையில் “முஸ்லிம் குடியேற்றப்பகுதியில் வணக்கத்தலங்கள், பெண்களுக்கான இஸ்லாமியக்கல்வி கூடங்கள் உருவாவது அப்பகுதிகளில் பெண்களின் மத்தியில் இறையச்சம் அதிகப்படவும் இஸ்லாமிய உணர்வும் எழுச்சியும் ஏற்ப்பட தூண்டுகோலாக அமையும். ,
அருள்வளமிக்க சூழல் அப்ப்பகுதியில் உண்டாகும் இவ்வுயரிய பணி செய்து வணக்கத்டலத்தினையும் பெண்கள் இஸ்லாமிய கல்வி பெற மத்ரஸா நிஸ்வனைனையும் நிர்மாணித்தவர்களுக்கு அல்லாஹ் சிறந்த நற்கூலியை வழங்கி அருள்பாலிப்பானாக” என குறிப்பிட்டார்
நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவி அஸ்மத் ஹுசைன் மன்பஈ நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் பேஷ் இமாம் மவ்லவி ஹபீப் ரஹ்மான் பாஸி, , ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர், நிறைவில் டவுன் காஜி துஆ ஓதினார் நிகழ்ச்சியில் ஜமாஅத் துணைத்தலைவர் ஜனாப் ஏ.எம்.எம்.செய்யது அபூபக்கர் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கியூ.செய்யது இப்ராஹீம் மற்றும் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர் அன்று
மாலை பெண்கள் திரளாக சென்று பார்வையிட்டனர்
AdiraiPost
கீழக்கரை
திறப்பு விழா
மதரஸா
கீழக்கரையில் அல்முஸல்லா பலாஹ் -அல்மத்ரஸத்துல் பலாஹ் திறப்பு விழா
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்