Breaking News
recent

வஃக்பு வாரிய தலைவரை மாற்ற வேண்டும்! காயல் மஹபூப் வலியுறுத்தல்!!

Wednesday, December 17, 2008
வஃக்பு வாரிய தலைவரை மாற்ற வேண்டும்! காயல் மஹபூப் வலியுறுத்தல்!!

தமிழகத்தில் 90 சதவீதத் திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் சுன்னத் ஜமாஅத் கொள்கையை சார்ந்தவர்கள். அந்த கொள்கைக்கு மாறான ஒருவர் வஃக்பு வாரிய தலைவராக தொடர்ந்து நீடிப்பதை சமுதாயம் விரும்பவில்லை. தற்போதைய வக்ஃபு வாரிய தலைவரை பதவி நீக்கம் செய்து சுன்னத் ஜமாஅத் கொள்கையில் நம்பிக்கை உடைய ஒருவரை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் நடைபெற்ற தென் மண்டல மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

அனைத்து தரப்பு மக்களும் சமூக நல்லிணக்கத் துடன் வாழவேண்டும் என்பதுதான் முஸ்லிம் லீகின் நோக்கம். மும்பை தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின் றோம். இதில் பலியான 185 பேரில் 44 பேர் முஸ்லிம்கள். இதன் மூலம் பயங்கர வாதத்திற்கு மதம் காரணமாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது.

பயங்கரவாதம்- தீவிரவாதம் போன்றவற்றிற்கு எதிராக அகில இந்திய அளவில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் மாநாடு நடத்த உள்ளோம்.

தமிழ்நாட்டில் 3 மண்டல மாநாடுகளை நடத்த உள்ளோம்., தென் மண்டல மாநாடு ஜனவரி 24ஆம் தேதி ராமநாதபுரத் திலும், மத்திய மண்டல மாநாடு தஞ்சையிலும், வடக்கு மண்டல மாநாடு வேலூரிலும் நடத்த இருக்கின்றோம்.

நாட்டில் நல்லி ணக்கம் பேண வேண்டும் என்பதற் காகத்தான் பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதியை முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க தினமாக கடைபிடித்து வருகின்றோம்.

முஸ்லிம் சமுதாய இயக்கங்களில் அனைத்து சமய மக்களிடமும் ஓட்டு கேட்கக்கூடிய தகுதி முஸ்லிம் லீகிற்கு மட்டும்தான் உள்ளது

தி.மு.க. ஆட்சி, சிறப்பாக செயல்படுகிறது. தி.மு.க. கூட்டணியிலேயே முஸ்லிம் லீக் தொடர்ந்து நீடிக்கும்.,

தமிழகத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் சுன்னத் ஜமாஅத் கொள்கையில் நம்பிக்கையுடையவர்கள். அந்த கொள்கைக்கு மாற்றமான ஒருவர் வக்ஃபு வாரிய தலைவராக இருப்பதை சமுதாயம் விரும்பவில்லை.

தமிழக அரசு உடனடியாக தற்போதைய வஃக்பு வாரிய தலைவரை நீக்கி சுன்னத் ஜமாஅத் கொள்கை சார்ந்தவரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு காயல் மஹபூப் தெரிவித்தார்.

பேட்டியின் போது மாநில துணைத் தலைவர் கோதர் மைதீன், மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத், தலைமை நிலையச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் ஆலிம்கள் அணி செயலார் ஹாமீத் பக்ரீ, நெல்லை மாவட்ட தலைவர் துராப்ஷா, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வாவு நாசர் ஆகியோர் உடன் இருந்தனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.