பலியான தாஜ் ஹோட்டல் ஊழியரின் மகன் படிப்புச் செலவை காங்கிரஸ் கட்சி ஏற்கும்: கே.வீ.தங்கபாலு அறிவிப்பு
ஆம்பூர், டிச. 13: மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ஊழியர் ஆம்பூரைச் சேர்ந்த ரஹமத்துல்லாவின் குடும்பத்தினரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது ஆம்பூர் தனியார் பள்ளியில் தற்போது 9-ம் வகுப்பு படிக்கும் ரஹமத்துல்லாவின் 3-வது மகன் சலீம் தப்ரேஸ்சின் முழு படிப்புச் செலவை காங்கிரஸ் கட்சி ஏற்கும் என்றும் தாஜ் ஹோட்டல் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு ரஹமத்துல்லாவின் மகனுக்கு வேலை, ஹோட்டல் நிர்வாகத்திடமிருந்து அவரது குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டிய பயன்கள் வாங்கி தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கே.வீ.தங்கபாலு கூறினார்.
கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜெயமோகன், இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஹஜினா சையத், நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் மாணிக்கம், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் நேதாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
AdiraiPost
அறிவிப்பு
கட்சி
காங்கிரஸ்
கே.வீ.தங்கபாலு
தாஜ் ஹோட்டல்
படிப்பு
பலி
மகன்
பலியான தாஜ் ஹோட்டல் ஊழியரின் மகன் படிப்புச் செலவை காங்கிரஸ் கட்சி ஏற்கும்: கே.வீ.தங்கபாலு அறிவிப்பு
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்