Breaking News
recent

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷுக்களை வீசிய எகிப்து நிருபரை விடுதலை செய்யக் கோரி ஈராக்கில் போராட்டங்கள் நடைபெற்றன.

பாக்தாத்,டிச,17_
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷுக்களை வீசிய எகிப்து நிருபரை விடுதலை செய்யக் கோரி ஈராக்கில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிருபரை ஹீரோவாக அரபு நாடுகள் பாராட்டி வருகின்றன.

ஈராக் மீது போர் தொடுத்த அமெரிக்கா தனது நாட்டு படைகளை ஈராக்கில் இருந்து இன்னும் விலக்கி கொள்ளவில்லை. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு ரகசிய பயணம் மேற்கொண்டார். ஈராக் பிரதமர் நூரி அல்மாலிகியை சந்தித்து பேசிய பிறகு இவர்கள் இருவரும் ஒரு சிறிய அறையில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து ஒளிபரப்பாகும் அல் பாக்தாத்தியா என்ற தொலைக்காட்சியின் நிருபர் முன்தாதர் அல் ஜெய்தி என்பவர் ஜார்ஜ் புஷ் மீது தனது இரு ஷ$க்களையும் கழட்டி வீசினார். இந்த தாக்குதலில் இருந்து ஜார்ஜ் புஷ் சமயோசிதமாக தப்பித்தார்.ஷுக்களை வீசிய அல் ஜெய்தி என்ற அந்த நிருபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இந்த நிருபரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஈராக் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களின் உணர்வுகளை இந்த நிருபர் பிரதிபலித்துள்ளதாக ஈராக் மக்கள் கூறினர். இந்த நிருபருக்கு ஆதரவாக அவர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்ட நிருபரை விடுதலை செய்ய வேண்டும் என்று பல அரபு நாடுகளை சேர்ந்த மக்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர். சிரியா, லிபியா போன்ற நாடுகளிலும் இந்த நிருபருக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்த நிருபருக்கு துணிகர செயல் விருது வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் நிருபர் அல் ஜெய்திக்கு ஆதரவாக வாதாட தயார் என்று சதாம் உசேனின் முன்னாள் வழக்கறிஞர் ஒருவர் உட்பட 200 க்கும் மேற்பட்ட வக்கீல்கள் முன்வந்துள்ளனர். இந்த நிருபருக்கு ஒரு புறம் ஆதரவு இருந்தாலும், அமெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகளில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லால்பேட்டை . காம்

லால்பேட்டை . காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.