Breaking News
recent

பக்ரீத்: மாணவர்களுக்கு உணவு

பக்ரீத்: மாணவர்களுக்கு உணவு

சிவகாசி, டிச. 13: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிவகாசி தமுமுக சார்பில் சி.எம்.எஸ். மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உணவுப் பொருள் வழங்கப்பட்டது.

தமுமுக விருதுநகர் மாவட்டச் செயலர் அஜ்மீர்கான், பொருளாளர் முஸ்தபா ஆகியோர் பள்ளித் தலைமை ஆசிரியர் பர்னபாஸிடம் இறைச்சி, அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினர்.

நிகழ்ச்சியில், சிவகாசி நகரத் தலைவர் மாபுபாஷா, பொருளாளர் கண்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேமுதிக சார்பில் பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பானி வழங்கப்பட்டது.

தேமுதிக முன்னாள் மாவட்டச் செயலர் பி. வைரமுனி தலைமையில், முஸ்லீம் நடுத் தெரு, வடக்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு குர்பானி வழங்கப்பட்டது.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.