Breaking News
recent

பிப்ரவரி 12-ல் கூடுகிறது நாடாளுமன்றம்

பிப்ரவரி 12-ல் கூடுகிறது நாடாளுமன்றம்

புதுதில்லி, ஜன.15: பதினான்காவது மக்களவையின் நிறைவுக் கூட்டத் தொடர் பிப்ரவரி 12-ம் தேதி கூடுகிறது.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறியது: நாடாளுமன்றக் கூட்டத் தொடரை பிப்ரவரி 12-ம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. இக் கூட்டத் தொடர் பிப்ரவரி 26-வரை நடத்தப்படும். மக்களவை மற்றும் மாநிலங்களவைக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையாற்றுவார். அவரது உரை மீதான விவாதம் இரு அவைகளிலும் நடக்கும். அதன்பின் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மன்மோகன் சிங் பதிலளித்துப் பேசுவார். இக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.