Breaking News
recent

ஜன.21-ல் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்

ஜன.21-ல் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்: இ.ம.க அறிவிப்பு

கோவை, ஜன.17: தமிழகத்தில் ஜன.21-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து இக் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஜன.21-ம் தேதி கள் இறக்கும் போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. சுதேசி பானமான கள்ளை அனுமதிக்க வலியுறுத்தி இப் போராட்டம் நடத்தப்படுகிறது.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சி சார்பில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும்.

எனவே, டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு விவசாயிகள் கள்ளை தாங்களாகவே இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.