Breaking News
recent

அபிராமம் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி என்.என்.எஸ்.முகாம்

காடநகரியில் என்.என்.எஸ்.முகாம்


ஜன. 4: அபிராமம் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி என்.என்.எஸ். மாணவர்கள் முகாம் சார்பில், கமுதி அருகே காடநகரியில் வியாழக்கிழமை பாலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேரணி நடைபெற்றது.

தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமின் 6-ம் நாள் கோயில் உழவாரப் பணி மற்றும் எல்.ஐ.சி. வேலைவாய்ப்பு கருத்தரங்கமும் நடைபெற்றன.

7-ம் நாள் கால்நடைகள் இலவச மருத்துவ சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது. தொடர்ந்து, 8-ம் நாள் முகாமில் எய்ட்ஸ் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.

இதையடுத்து, 9-ம் நாள் முகாமில், பாலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசார பேரணி நடைபெற்றது. மாலை எல்.ஐ.சி. சிவராமன் பல குரல் நிகழ்ச்சி மற்றும் மாணவர்கள் கலைநிகழ்ச்சி ஆகியன நடைபெற்றன.

திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாகிர்உசேன் வரவேற்றார்.

உதவி ஒருங்கிணைப்பாளர்கள் பஷீர், கண்ணதாசன் ஆகியோர் நன்றி கூறினர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.