திருவாடானை அரசு மருத்துவமனையில் தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் அவதி
திருவாடானை, ஜன. 5: திருவாடானை அரசு மருத்துவமனையில் பத்து நாளாக தண்ணீர் இன்றி நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
திருவாடானையில் தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. 30 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் தினமும் 500-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் பல நாளாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் உள் நோயாளிகளும், ஊழியர்களும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக குடும்பக் கட்டுப்பாடு செய்ய வருவோர் வீட்டிலிருந்தே தண்ணீர் கொண்டு வருகிறார்கள்.
இது குறித்து மருத்துவமனை அதிகாரியிடம் கேட்டதற்கு, பம்ப் ரிப்பேர் ஆகிவிட்டது. சில நாளுக்கு முன்தான் ரிப்பேர் சரி செய்தேன். தற்போது செய்ய இயலாது. பொதுப்பணித் துறை அல்லது பஞ்சாயத்து நிர்வாகம் தான் இந்த ரிப்பேரை சரி செய்ய வேண்டும் என்றார்.
இது தொடர்பாக திருவாடானை ஊராட்சி மன்றத் தலைவர் மகாலிங்கத்திடம் கேட்டதற்கு, மருத்துவமனையில் நிதி உள்ளது. ஆனால் மருத்துவ அதிகாரி சரி செய்வது இல்லை. இது குறித்து ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளேன் என்றார்.
மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்