என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்
பரமக்குடி, ஜன. 5: பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். முகாம் பார்த்திபனூர் அருகே உள்ள பரளை கிராமத்தில் நடைபெற்றது.
டிச.25-ம் தேதி தொடங்கி ஜன.3 வரை இம் முகாம் நடைபெற்றது. துவக்க விழாவுக்கு பள்ளித் தாளாளர் இ. அப்துல்ரஹிம் தலைமை வகித்தார். ஜமாத் தலைவர் எஸ்.என்.எம். முகம்மதுயாக்கூப், செயலர் எஸ்.என்.ஏ. முகம்மதுஈசா, கல்விக் குழு உறுப்பினர்கள் எஸ்.என். முகம்மதுயாசின், எஸ்.எம். சாகுல் ஹமீது, ஏ. லியாக்கத்தலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவித் தலைமை ஆசிரியர் எம். அஜ்மல்கான் வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் டி. ராஜேந்திரன், பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் ஏ. மேகவர்ணம், தலைமை ஆசிரியர் எஸ். நாகூர்மீரா, மாவட்டத் தொடர்பு அலுவலர் ஏ. சையது அலி ஆகியோர் முகாமின் அவசியம் குறித்துப் பேசினர்.
இதில் மாணவர்கள் மரக்கன்றுகள் நடுதல், எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம், பேரிடர் மேலாண்மைப் பயிற்சி கருத்தரங்கம், மசூதி, கோயில் வளாகங்களைச் சுத்தப்படுத்துதல், நுகர்வோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஆகியவற்றை மேற்கொண்டனர். நிறைவு நாளில் என்எஸ்எஸ் அலுவலர் ஏ. சையது ஒலி சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்