Breaking News
recent

குண்டான, விமானப் பணிப்பெண்கள் வேலை நீக்கம்

குண்டான, விமானப் பணிப்பெண்கள் வேலை நீக்கம்


புதுடெல்லி, ஜன.6-

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த விமானப் பணிப்பெண்கள் 10 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களது வேலை நீக்கத்துக்கு காரணம் அவர்களது குண்டான-அதிக எடை உள்ள உடல் ஆகும். அவர்கள் தங்களது எடையை குறைக்கும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டும் அதன்படி செய்யாததால் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்து உள்ளது. இந்தியா முழுவதும் இதே போல மேலும் பல பணிப்பெண்கள் அதிக குண்டாக இருப்பதாகவும், அவர்களுக்கும் உடல் எடையை குறைக்கச் சொல்லி நோட்டீசு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தங்களுக்கு முன்கூட்டியே நோட்டீசு கொடுக்க வில்லை என்று அந்தப் பெண்கள் கூறிய புகாரை மறுத்துள்ள ஏர் இந்திய நிறுவனம், அந்தப் பெண்களுக்கு வேறு வேலை தர முன்வந்ததாகவும், ஆனால் அவர்கள் விமானத்தில் பறக்கும் பணிப்பெண் வேலைதான் வேண்டும் என்று கேட்டதாகவும் தெரிவித்து உள்ளது.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.