Breaking News
recent

மாணவர்களுக்கு கிரண்பேடி அறிவுரை

மாணவர்களுக்கு கிரண்பேடி அறிவுரை

கோவை, ஜன.20: இலக்கை நோக்கி பயணம் செய்யுங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி.

கோவை ஜிஆர்டி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அவர் பேசியது: எதிர்காலத்தில் பல்வேறு சவால்கள் காத்திருப்பதால் மாணவர்கள் தங்களது மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் முக்கியமானவை. எதிர்காலத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். நமக்குள் இலக்கு நிர்ணயித்து அதை அடைய பாடுபட வேண்டும். முதலில், நம்முடைய எதிர்பார்ப்பு என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சி அடைவதன்மூலம் வெற்றி கிடைக்கிறது.

மேடு, பள்ளம் நிறைந்தது வாழ்க்கை. அவற்றில் எதுவும் நிலையானது அல்ல. வாழ்க்கையில் வரும் இன்ப, துன்பங்களை சமாளித்து அதற்கேற்றவாறு நம்மை மாற்றி இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும். நம் மனது, நல்ல சக்தியையும், தீய சக்தியையும் உள்ளடக்கியது. இவற்றில் நல்ல சக்தியைப் பின்பற்றும் வகையில் மனதை ஒருநிலைப்படுத்தி நல்ல சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.

ஒருமுறை தோல்வி அடைந்துவிட்டால் சோர்ந்து விடக் கூடாது. பலமுறை முயற்சி செய்தால் மட்டுமே சாதிக்க முடியும். ஆகவே, பொழுதுபோக்கிற்கு இடம் கொடுக்காமல் வாழ்வில் சாதிக்க முனைப்பு காட்டுங்கள் என்றார்.

கிரண்பேடி கேட்ட கேள்விகளுக்கு மாணவ, மாணவியர் பதில் அளித்தனர். அதேபோல், மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் கிரண்பேடி பதிலளித்தார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.