சென்னை சங்கமம் கவிதைப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜன. 5: சென்னை சங்கமம் விழாவில் நடைபெறும் கவிதைப் போட்டிக்கு ஜனவரி 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கனிமொழி எம்.பி. நடத்தும் சென்னை சங்கமத்தின் ஒரு அங்கமான தமிழ்ச் சங்கமம் இலக்கிய நிகழ்வுகள்-09 ஜனவரி 11 முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
இப்போட்டியில் இந்த ஆண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகளுக்கான கவிதைப் போட்டி நடைபெறுகிறது.
சிறந்த கவிதைகளுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.15 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும் 10 கவிதைகளுக்கு தலா ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் கவிதைகளுடன் தங்களைப் பற்றிய விவரங்கள், புகைப்படம் ஆகியவற்றை நிர்வாகத்திடம் கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம். கவிதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 13. மேலும் விவரங்களுக்கு:
www.tamilsangamamonline.com

முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்