ஜப்பான் பல்கலையில் லாலு உரை
பாட்னா, ஜன. 4: ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்குப் பாடம் நடத்த உள்ளார்.
இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தள செய்தி தொடர்பாளர் ஷியாம் ரஜாக் கூறியதாவது:
ஜப்பான் அரசின் அழைப்பின் பேரில் ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் வருகிற ஜன-11ம் தேதி முதல் அந்நாட்டிற்கு 10 நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது இந்திய ரயில்வே துறை குறித்து ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட சில பல்கலைக் கழகங்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்த உள்ளார். இந்த வருடம் ரயில்வே துறை 1லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் என்று லாலு சபதம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்