கீழக்கரையில் தொடர் சாலை விபத்துகளை தடுக்க வேண்டுகோள்

கீழக்கரையில் தொடர் சாலை விபத்துகளை தடுக்க வேண்டுகோள்


கீழக்கரை, ஜன. 6: கீழக்ரையில் சாலை விபத்துகளைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பாதுகாப்பு கழக கீழக்கரை கிளை செயலர் முகைதின் இப்ராகீம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசின் சாலை மேம்பாட்டு திட்டதின் கீழ் ராமநாதபுரம் கீழக்கரை சாலை புதிதாக போடப்பட்டுள்ளது.

சாலையில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு உயிர்ச் சேதம் ஏற்படுகிறது, இதற்கு முக்கிய காரணம் சாலை வளைவுகளில் வளைவுகளை குறிக்கும் அடையாள சின்னம் பதித்த பலகைகள் இல்லை. சாலை வளைவுகளில் காணப்படும் மரங்களாலும், விளம்பர போர்டுகளாலும் வளைவுகளை வாகன ஓட்டிகளால் தெளிவாக பார்க்க முடியவில்லை. எனவே தொடரும் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிர் இழப்பை கருத்தில் கொண்டு சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்