பெரியபட்டினத்தில் என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா

பெரியபட்டினத்தில் என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா


கீழக்கரை, ஜன. 6: ராமநாதபுரம் அருகே பெரியபட்டடினத்தில் கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா திங்கள்கிழமை நடந்தது.

பெரியபட்டினம் சமுதாயக் கூடத்தில் நடந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் எம். அபுல்ஹசன் சாதலி தலைமை வகித்தார்.

கல்லூரி நிறுவனர் முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் ஹமீது அப்துல்காதர், இயக்குநர் பைசல் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

10 நாள்கள் நடைபெற்ற இம் முகாமில் ராமநாதபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் கே. ஹசன் அலி, ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப் பணி துணை இயக்குநர் டாக்டர் உமா மகேஸ்வரி, முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அ. அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுகாதார மேம்பாடு, மரக்கன்று நடுதல், ஊட்டச் சத்தின் அவசியம், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும் முகாமில் பல்வேறு பணிகளைச் செய்தனர்.

ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் நாசர், ஆரோக்கிய அனுசியா, திட்ட அலுவலர்கள் ஜி. முகம்மது இப்ராஹிம், ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்