கருத்தரங்கம்
கீழக்கரை, ஜன. 6: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக்கில், "கட்டுமானத் துறையில் நவீன உத்திகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுதில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் நிதி உதவியுடன் பாலிடெக்னிக்கில் செயல்பட்டுவரும் தொழிலக பயிலகக் கூட்டுத் திட்டப் பிரிவு மற்றும் கனடா, இந்திய கூட்டுப் பயிலகத் திட்டம் ஆகியன இணைந்து இக் கருத்தரங்கை நடத்தின.
ராமநாதபுரம் ஐடியல் கட்டுமான நிர்வாக இயக்குநர் பொறியாளர் எஸ். ராம்குமார் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.
பாலிடெக்னிக் முதல்வர் அ. அலாவுதீன் தலைமை வகித்தார். அமைப்பியல் துறைத் தலைவர் ஐ. கமால் அப்துல் நாசர் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜி. அயூப்கான் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்