முதுகுளத்தூர் அருகே உள்ள சித்தரங்குடி சரணாலயத்தை மறந்த வெளிநாட்டு பறவைகள்
மேலச்செல்வனூரில் தஞ்சம்
முதுகுளத்தூர்,ஜன.7-
முதுகுளத்தூர் அருகே உள்ள சித்திரங்குடி சரணாலயத் துக்கு ஆண்டுதோறும் வரும் வெளிநாட்டு பறவைகள் தற்போது மேலச்செல்வனூரில் தஞ்சமடைந்துள்ளன.
வெளிநாட்டு பறவைகள்
முதுகுளத்தூர் தாலுகாவில் சித்திரங்குடி, காஞ்சிரங்குளம் ஆகிய கிராமங்களில் ஆண்டுதோறும் ஏராளமான வெளி நாட்டு பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம். இந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் உள்ள அடர்ந்த கரு வேல மரங்கள் பறவைகளின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற தாக இருந்து வருகிறது. இவ்வாறு வரும் பறவைகளுக்கு அப்பகுதி மக்கள் எந்த தொந்தரவும் கொடுப்பதில்லை. அவற்றிற்கு தக்க பாதுகாப்பு கொடுத்து வந்தனர்.
இதனால் இந்த கிராமங்கள் பறவைகள் சரணாலயமாக விளங்கி வந்தன. இந்த பறவைகள் தங்கி செல்லவும், சுற் றுலா பயணிகள் பறவைகளை கண்டு ரசிக்கவும் வனத் துறை சார்பில் எந்த வசதியும் செய்யப்படவில்லை. சரணாலயம் என்ற போர்டு மட்டுமே உள்ளது.
மாற்று இடம்
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த கிராமங்க ளுக்கு வெளிநாட்டு பறவைகள் வருவதில்லை. இவை மாற்று இடம் தேடி கடலாடி தாலுகா மேலச்செல்வனூர் கிராமத் தில் தஞ்சம் அடைந்துள்ளன. இங்குள்ள கண்மாயில் மரங் கள் அடர்ந்துள்ளதாலும், தண்ணீர் தேங்கியுள்ளதாலும் பறவைகள் மேலச்செல்வனூரில் தங்கி விட்டன.
வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடவும், தொல்லை கொடுப்பதையும் ஊராட்சி நிர்வாகம் தடை செய்துள்ளது. மேலும் பறவைகளை பாதுகாக்க வனத்துறையினருடன் கிராம மக்கள் இணைந்து செயல்படுகின்றனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான பறவைகள் மேலச்செல்வனூருக்கு வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்