வட்டித் தொகையின் மூலம் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறும் எழுத்தாளர்கள்

கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறும் எழுத்தாளர்கள்



சென்னை, ஜன.5: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறும் எழுத்தாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2007-ம் ஆண்டு 30-வது புத்தகக் காட்சியில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கினார்.

அத் தொகையை வங்கியில் டெபாசிட் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டார். அதன்படி கடந்த ஆண்டு முதல் சிறந்த எழுத்தாளர்கள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு "கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி' என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது.

அதன்படி 2009-ம் ஆண்டுக்கு விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர்கள் விவரம் வருமாறு:

கவிதைக்கான விருது பேராசிரியர் சி. மணி, சிறுகதை, நாவலுக்கான விருது ஆர். சூடாமணி, நாடகத்துக்கான விருது "கூத்துப்பட்டறை' முத்துசாமி, கட்டுரைக்கான விருது முனைவர் க. நெடுஞ்செழியன், இந்திய மொழி எழுத்தாளருக்கான விருது கன்னட எழுத்தாளர் கிரிஷ் கர்னாட், இந்திய ஆங்கில எழுத்தாளர் விருது எஸ். முத்தையா ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன. இவர்களுக்கு புத்தகக் காட்சி தொடக்க விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருதை வழங்குவார். இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.