Breaking News
recent

சிறந்த தமிழ் நூல்கள், பதிப்பகங்களுக்குப் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு

சிறந்த தமிழ் நூல்கள், பதிப்பகங்களுக்குப் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, ஜன. 13: 2007-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நூல்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு பரிசுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது

பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் மற்றும் வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியலை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

சிறந்த தமிழ் நூலுக்கு ரூ. 20 ஆயிரமும், அதனை வெளியிட்ட பதிப்பகத்துக்கு ரூ. 5 ஆயிரமும் பரிசு வழங்கப்படும்.

பரிசு பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகங்கள்:

திருத்தொண்டர் காப்பியம் - சூ. இன்னாசி, காவ்யா பதிப்பகம்; கனவைப் போலொரு மரணம் - அ. வெண்ணிலா, காதைப் பதிப்பகம்; நதியின் மடியில் - ப. ஜீவகாருண்யம், அருள் புத்தக நிலையம், கடலூர்; ஆலமர இடையழகு - எழில் வரதன், காதைப் பதிப்பகம்; நாட்டுக்கு உழைத்த நல்லவர் மருது சகோதரர்கள் - சு. குப்புசாமி, பழனியப்பா பிரதர்ஸ்; சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் பண்பும் - முனைவர் கா. மீனாட்சிசுந்தரம், ருக்மணி ராமநாதன் அறக்கட்டளை, காரைக்குடி.

வ.அய். சுப்பிரமணியம் கட்டுரைகள் - வ.அய். சுப்பிரமணியம், அடையாளம் பதிப்பகம், திருச்சி; அடோல்ப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும் - மு. சுப்பிரமணி, சீதை பதிப்பகம்; உலக சினிமா வரலாறு மௌனயுகம் - அஜயன் பாலா, தென்திசை பதிப்பகம்; நடுநாட்டு சொல்லகராதி - கண்மணி குணசேகரன், தமிழினி பதிப்பகம்; கலை வரலாற்றுப் பயணங்கள் - மு. ஸ்ரீனிவாசன், சேகர் பதிப்பகம்; தமிழர் தந்தை வ.உ. சிதம்பரனார் - அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, அனிதா பதிப்பகம், திருப்பூர்.

புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும் - முனைவர் சு. தில்லைவனம், சிவசக்தி பதிப்பகம், புதுச்சேரி; பெரும்புகழ் எறும்புகள் - முனைவர் மலையமான், அன்புப் பதிப்பகம்; மக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும் - முனைவர் உலோ. செந்தமிழ்க்கோதை, பாவை பப்ளிகேஷன்ஸ்; இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும் - டாக்டர் ஜி. பாலன், டாக்டர் டி. தட்சிணாமூர்த்தி, வானதி பதிப்பகம்.

மாற்று மருத்துவங்கள் பகுதி 1,2,3,4 - டாக்டர் இரா. மாணிக்கவாசகம், அன்னை அபிராமி அருள் பதிப்பகம்; உயிர்காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர் கே.ஏ. சிதம்பர காங்கேயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்; மாணிக்கவாசகரும், சிவப்பிரகாசரும் - முனைவர் க. விநாயகம், ஸ்ரீ அன்னை நூலகம், திண்டிவனம்; கற்பித்தலில் புதிய அணுகுமுறை (வரலாறு) - முனைவர் க. வசந்தி, முனைவர் பி. இரத்தினசபாபதி, வனிதா பதிப்பகம்.

ஜெட்ரோபா சாகுபடியும் பயோ டீசலும் - முனைவர் வெ. சுந்தரராஜ், முனைவர் சாமுவேல் பால்ராஜ், மெர்க்குரிசன் பப்ளிகேஷன்ஸ்; தமிழக சுற்றுச்சூழல் - இரா. பசுமைக்குமார், தாமரை பப்ளிகேஷன்ஸ்; தமிழர் கலை இலக்கிய மரபுகள் - முனைவர் ஆறு. இராமநாதன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்; திராவிட இயக்க வரலாறு - கே.ஜி. இராதாமணாளன், பாரி நிலையம்.

மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் பிரிவுகளுக்கான பரிசு ஜி. மணிமாறன், கே, ரேணுகா எழுதிய பூகம்ப பூமியைப் புரிந்து வெல்வோம் (ரேணுகா பதிப்பகம், நெல்லை) என்ற நூலுக்கும், இராஜரத்தினம் எழுதிய பண்பாடு வேரும் விழுதும் (தமிழ் ஹெரிடேஜ் அசோசியேஷன், கனடா) என்ற நூலுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.