Breaking News
recent

கீழக்கரை அருகே மணல் பரப்பி உறங்கும் மக்கள்

கீழக்கரை அருகே மணல் பரப்பி உறங்கும் மக்கள்

கீழக்கரை,ஜன.9: நோய் குணமாகும் என்று நம்புவதால் கீழக்கரை பகுதி மக்கள் வீட்டில் மார்பிள் பதித்து அதில் மணல் பரப்பி படுத்துறங்குகின்றனர்.

கீழக்கரை அருகே உள்ளது பெரியபட்டணம் கிராமம். இப்பகுதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

கடலோர கிராமமாக இருப்பதால் மீனவர்களும் அதிகளவில் உள்ளனர். இப்பகுதியை சேர்ந்தவர்கள் து£ங்குவதற்கு பெரும்பாலும் கட்டிலை பயன்படுத்துவதில்லை. வீடுகளில் மார்பிள் பதித்துள்ளனர். மார்பிள் தரையில் மணல் பரப்பி அதன் மீது படுத்துறங்குகின்றனர்.
இதுகுறித்து பெரியபட்டணத்தை சேர்ந்த அப்துல்மஜீத் கூறும்போது, Ôபல லட்சம் ரூபாயில் வீடு கட்டப்பட்டாலும் மணலில் படுத்து உறங்குவதால் உடல் வலி நீங்குகிறது. நோய் நிவாரணி என்று நம்புவதால் பெரும்பாலான வீடுகளில் மணல் குவித்து உறங்குகின்றனர்Õ என்றார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.