Breaking News
recent

ராமநாதபுரம் தமுமுக மாவட்டத் தலைவர் கைது

ராமநாதபுரம் தமுமுக மாவட்டத் தலைவர் கைது


ராமநாதபுரம், ஜன. 3: ராமநாதபுரத்தில் 6 போலீஸ் வாகனங்களின் இருக்கைகளை சேதப்படுத்தியதாக தமுமுக பிரமுகர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவராக இருந்து வருபவர் எஸ்.சலிமுல்லாகான். இவர் தலைமையில் டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் மறியல் நடந்தது. தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதில் பங்கேற்ற அனைவரையும் போலீஸôர் 6 வாகனங்களில் ஏற்றி திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர்.

அவர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் இருக்கைகளை கிழித்து சேதப்படுத்தியதாக சலிமுல்லாகான் உள்ளிட்ட 9 பேர் மீது போலீஸ் வாகன ஓட்டுனர்கள் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக சலிமுல்லாகான் கைது செய்யப்பட்டார்
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.