Breaking News
recent

மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு

மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு

ஐயப்ப பக்தர்கள் தங்குவதற்கு மசூதியில் இடமளிக்கும் முஸ்லிம்கள்

சபரிமலை, ஜன.6&

திருச்சூர் அருகே உள்ள ஒரு மசூதியில் ஐயப்ப பக்தர்கள் தங்குவதற்கு முஸ்லிம் மக்கள் வசதி செய்து கொடுக்கும் சம்பவம், மத நல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

மதம்

உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஒற்றுமை, அன்பு மற்றும் ஒழுக்க நெறிமுறைகளை மட்டுமே போதித்த போதிலும், அந்த மதங்களை பின்பற்றும் சில மனிதர்கள் மட்டும் அப்பாதையில் இருந்து விலகி நடக்கின்றனர். இதனாலேயே மதத்தின் பெயரால் ஆங் காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழ்நிலையில், வெவ் வேறு மதங்களைச் சேர்ந்த மனிதர்கள் மதவேறுபாட்டை களைந்து ஒருவருக்கொருவர் அரவணைத்துக் கொள்ளும் பாங்கையும் பல இடங்களில் நாம் காண முடிகிறது.

சுவாமி ஐயப்பனை தரிசிக்க செல்கிறவர்கள் சபரிமலையில் உள்ள வாவர் மசூதிக்குச் சென்று வழிபடுவதும், அந்த மசூதியில் பக்தர்களுக்கு திருநீறு வழங்கப்பட்டு வரு வதும் இதற்கு ஒரு நல்ல எடுத் துக்காட்டாக இருக்கிறது.

மசூதி

இதேபோல், இந்துக் கடவு ளான ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, திருச்சூர் அருகே உள்ள சூண்டல் பகுதியில் வாழும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மசூதியில் தங்க இடம் கொடுத்து, பணி விடைகள் செய்து வருவது மத நல்லிணக்கத்திற்கு மேலும் ஒரு முத்தாய்ப்பாக அமைந்து உள்ளது.

திருச்சூர் அருகே குண்ணங் குளம் ரோட்டில் அமைந்து உள்ளது இந்த சூண்டல் பகுதி. இங்கு முஸ்லிம்களுக்கு சொந்தமான ஜூம்மா மசூதி, தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கு வசதியாக எந்நேரமும் திறந்தவண்ணம் உள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடையாக மட்டு மின்றி, வாகனங்களில் வரும் ஐயப்ப பக்தர்களும் இந்த மசூதியில் இளைப்பாறி விட் டுச் செல்கின்றனர். இவர்க ளுக்கு குடிநீர் வசதி, குழுவாக வருவோர்களுக்கு சமையல் செய்வதற்கு இடவசதி போன் றவற்றை இந்த மசூதியின் நிர் வாகம் செய்து கொடுக்கிறது.

கடந்த மாதத்தில் ஆந்திரா வில் இருந்து வந்த பக்தர்களின் வாகனம் பழுதானத்தைத் தொடர்ந்து 5 நாட்கள் அந்த பக்தர்கள் இந்த மசூதி வராந் தாவில்தான் தங்கி இருந் தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.