Breaking News
recent

மலேசியா முழுவதும் 160 புதிய தமிழ்ப் பள்ளிகள்

நாடு முழுவதும் சுமார் 160 புதிய தமிழ்ப் பள்ளிகளை கட்ட மலேசியா திட்ட மிட்டுள்ளது.மேலும் பிரச்சினைகள் எதிர் நோக்கும் 50 முதல் 60 தமிழ் பள்ளிகள் ஒரு வருட காலத்திற்குள் புதுப்பிக்கப்படும்.மலேசிய மனித வள அமைச்சரும் மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைமைச் செயலாளரு மான டாக்டர் எஸ். சுப்ரமணியம் இந்த விவரங் களை வெளியிட்டதாக தி ஸ்டார் நாளேடு குறிப் பிட்டது.


யோங் பெங் தமிழ்ப் பள்ளி கட்டட நிதிக்கு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசினார்.தமிழ்ப்பள்ளிகளை மேம் படுத்துவதற்காக துணைப் பிரதமர் நஜிப் துன் ரசாக் 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.யோங் பெங்கில் உள்ள தமிழ்ப்பள்ளிக்கு வகுப்பு அறைகள் கட்டுவதற்காக மட்டும் அரசாங்கம் 1.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியிருக்கிறது என்றார் அவர்.


“தமிழ்ப்பள்ளிகளை பாதுகாப்பதற்காக மலேசிய இந்தியர் காங்கிரஸ் எப் போதுமே பங்காற்றி வருகிறது,” என்று திரு சுப்ரமணியம் சொன்னார்.“இந்தச் சூழ்நிலையில் இந்தியச் சமூகமும் வேறு பாடுகளை மறந்து சமூகத் தின் முன்னேற்றத்திற்காக எல்லாரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.” என்று அவர் கேட்டுக் கொண்டார்.


“ஒன்றுபட்ட குரல்தான் ஓங்கி ஒலிக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.இதற்கிடையே நாட்டில் உள்ள 40,000 அகதிகளின் நிலை குறித்து அரசாங் கத்துடன் ஆலோசனை நடத்த மலேசிய மனித உரிமை மன்ற ஆணையர் என். சிவசுப்ரமணியம் விரும்புவதாக மலேசிய தமிழ் நாளேடு ஒன்று வெளியிட்டிருந்தது பற்றி அவர் கருத்துரைத்தார்.


அகதிகளில் 7,000 பேர் இலங்கை நாட்டவர்கள். இவர்களில் பெரும் பாலானவர்கள் அகதிகள் முகாமிலும் சிலர் சட்ட விரோதமாக நாட்டில் நுழைந்த காரணத்தால் தடுப்புக்காவலில் இருக் கின்றனர்.“பெரும்பாலானவர்கள் தங்களை கனடா, ஆஸ்தி ரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்கின்றனர். ஆனால் அந்நாடுகள் அவர்களை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டன,” என்றார் திரு சுப்ரமணியம்.

www.aknaonline.com
முத்துப்பேட்டை தகவல்

முத்துப்பேட்டை தகவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.