வள்ளியூர் அருகே நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி
நெல்லை,பிப் 21
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நான்கு வழிச்சாலை குளறுபடியால் பஸ் மீது மோதமல் இருக்க பைக்கை திருப்பியபோது நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக இறந்து போயினர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பாறைகுளத்தை சேர்ந்த ஜெபராஜ் ஐசக் என்பவரது மகன் சர்பிக்.பணகுடியை சேர்ந்த சவுகத் அலி மகன் ஷேக்மதார்.இவர்கள் இருவரும் வள்ளியூர் டி.இ.சி. கல்லூரியில் எலக்டிரிக்கல் கம்யூனிகேஷன் படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை இருவரும் கல்லூரி முடிந்து பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.பைக் கலந்தபனை விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் வந்தபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து சென்னையை நோக்கி ஒரு பஸ் வந்துகொண்டிருந்தது.அந்த பஸ் மீது மோதாமல் இருக்க பைக்கை துணைச்சாலையில் திருப்பியபோது எதிரே வந்த பைக் மீது மாணவர்கள் வந்த பைக் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே சர்பிக்,ஷேக்மதார் ஆகியோர் இறந்தனர்.மேலும் மற்றொரு பைக்கில் வந்த இரு மாணவர்களும் காயமடைந்தனர்.இந்த விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து நான்கு வழிச்சாலை குளறுபடியால் நடந்ததாக கூறப்படுகிறது. நான்கு வழிச்சாலை குளறுபடியால் நெல்லை மாவட்டத்தில் விபத்தில் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை தொடர்கிறது.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்