Breaking News
recent

கிரசண்ட் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கிரசண்ட் பள்ளியில் அறிவியல் கண்காட்சி


உதகை, ஜன. 31: உதகையிலுள்ள கிரசண்ட் பள்ளியில் முதலாவது அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் சுமார் 600 மாணவர்கள் வடிவமைத்திருந்த இந்த அறிவியல் கண்காட்சியினை சனிக்கிழமை காலையில் முதுமலை புலிகள் காப்பக திட்ட இயக்குநர் ராஜீவ் கே.ஸ்ரீவத்சவா தொடங்கிவைத்தார்.

1ம் வகுப்பு முதல் 10ம்வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக தலைப்புகள் கொடுக்கப்பட்டு அதன்பேரில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலக வெப்பமயமாதல், வனவிலங்குகளை பாதுகாத்தல், உயிர்ச்சூழல் மண்டலம், கோள்களின் இயக்கம், பாலவனைப்பகுதிகள், பனிமலைகள், வனவிலங்கு சரணாலயங்கள், நில நடுக்கம், எரிமலை, வனத்தீ உள்ளிட்டவைவைகளை விளக்கும் வகையில் காட்சி அமைப்புகள் இடம் பெற்றிருந்தன.

அதேபோல, காற்றாலை மின்சாரம் தயாரித்தல், யூகலிப்டஸ் தைலம் தயாரித்தல், சூரிய ஒளி மின்சக்தி, தண்ணீர் அளவை கண்காணித்தல் போன்றவை செயல் விளக்க வடிவிலும் செய்து காண்பிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை தொடங்கிவைத்த முதுமலை புலிகள் காப்பக இயக்குநர் ராஜீவ் ஸ்ரீவத்சவா, இளம் வயதிலேயே இதுபோன்ற செயல்முறை விளக்கங்கள் மூலம் மாணவர்களின் செயல் திறனை தூண்டுவது எதிர்காலத்தில் அவர்களை பெரும் அறிவியல் வல்லுநர்களாக்க மேற்கொள்ளப்படும் முயற்சி எனவும் இதை அனைவரும் பின்பற்ற வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

பள்ளியின் முதல்வர் உமர் பாரூக் பேசுகையில், இப்பள்ளியில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்தகைய அறிவியல் கண்காட்சி அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாகவும், இதுபோன்ற நேரடி செயல்முறை விளக்கங்களை செய்யும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுவர் எனவும் குறிப்பிட்டார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.