கடையநல்லூர், பிப். 19-
கடையநல்லூரில் நகராட்சியின் கடுமையான வரி விதிப்பை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விடுத்த அழைப்பை ஏற்று முழு அடைப்பு நடைபெற்றது.
வீட்டுவரி மற்றும் வணிக நிறுவனங்களின் வரியை குறைக்க கோரி நகராட்சி தலைவரிடம் பொது மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகதியாகும். இந்நகரில் 24ஆயிரம் வீடுகளும் ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்களும் உள்ளன.
இந்நகராட்சி வீட்டு வரியை இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமாக உயர்த்தியது. 60 ரூபாய் இருந்த வீட்டு வரி 600 ரூபாயாகவும், 100 ரூபாயாக இருந்த வீட்டு வரி 1000 ரூபாயாகவும் உயர்ந்தது. பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நகராட்சியின் தீர்மானத்திற்கு எதிராக இங்குள்ள வணிக நிறுவனங்களுக்கு வரி 25 சதவீதம் உயர்த்துவதற்கு பதிலாக 150 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. வணிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொது மக்களுக்கெதிரான நகராட்சியின் இந்த கடுமையான வரி விதிப்பிற்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போராட்ட அறிவிப்பை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று கடையநல்லூர் முழுவதும் 100 சதவீத முழு அடைப்பு நடைபெற்றது.
மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் டி.ஏ.செய்யது முஹம்மது தலைமையில் ஆயிரக்கணக்கானோர் நகராட்சிக்கு சென்று நகராட்சி தலைவர் ஏ.எம். இப்ராஹீமிடம் வரி குறைக்க கோரி கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில அபை;பு செயலாளர் நெல்லை மஜீத், காயிதே மில்லத் பேரவை மாநில துணை அமைப்பாளர் வி.எஸ். அமானுல்லா, டி.எம். அப்துல் காதர், மாவட்ட பொருளாளர் அப்துல் வஹாப், தொண்டர் அணி அமைப்பாளர் செய்யது இப்ராஹீம், நகர முஸ்லிம் லீக் தலைவர் முஹம்மது காசிம், மாவட்ட துணைத் தலைவர் ஏ.இ. அப்துல் காதர், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ. ஹைதர் அலி, இளைஞர் அணி தலைவர் ஏ.எம். ரஹமத்துல்லா, கே.எம். அப்துல் அஜீஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வரி குறைக்கப்படும் என நகராட்சி தலைவர் உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
AdiraiPost
கடுமையான வரி உயர்வு
மணிச்சுடர்
லால்பேட்டை இணையதளம்
கடுமையான வரி உயர்வு:கடையநல்லூரில் முழு அடைப்பு
லால்பேட்டை . காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்