Breaking News
recent

வெளிநாட்டு வேலை: ஏமாற்றிய ஏஜெண்ட் உள்பட 3 பேர் மீது வழக்கு

வெளிநாட்டு வேலை: ஏமாற்றிய ஏஜெண்ட் உள்பட 3 பேர் மீது வழக்கு

முதுகுளத்தூர், மார்ச் 18: வெளிநாடு வேலைக்கு ஆள்களை அனுப்பி வைத்தது தொடர்பான தகராறில், விவசாயியைத் தாக்கிய ஏஜென்டு உள்பட மூவரை, போலீஸôர் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

தஞ்சாக்கூரைச் சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம். இவர், தனது மகனை மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதற்காக ஏஜென்டு புளியங்குடி ராமையா மகன் முருகேசனிடம் கடந்த 2006-ம் ஆண்டில் ரூ. 85 ஆயிரம் பணம் கொடுத்தாராம்.

ஆனால், மலேசியாவில் சரியான வேலை கிடைக்காமல் ராமலிங்கம் மகன் ஓரிரு மாதத்தில் ஊருக்குத் திரும்பி வந்து விட்டாராம்.

இதனால், முருகேசனிடம் பணத்தைத் திருப்பித் தரும்படி ராமலிங்கம் கேட்டதாகவும், பணம் தருவதாகக் கூறி முருகேசன் ஏமாற்றி வந்ததாகவும் கறப்படுகிறது.

இதையடுத்து ஏற்பட்ட தகராறில், ராமலிங்கத்தை ஏஜென்டு முருகேசன் மற்றும் மணி, தியாகராஜன் ஆகியோர் தாக்கியும், சாதிப் பெயரைக் கூறியும் திட்டினராம்.

இது குறித்த புகாரின்பேரில், முதுகுளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் செந்தில், சார்பு-ஆய்வாளர் கீதா ஆகியோர் வழக்குப் பதிந்து மூவரையும் தேடி வருகின்றனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.