போலீஸுக்கு சவாலாகும் "நைஜீரியன் ஸ்கேம்”!
கோவை, மார்ச் 21: தமிழகம் முழுவதும் செல்போன், கணினி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடக்கும் "சைபர்” குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது.
இணையதளத்தில், லாட்டரியில் பரிசு விழுந்ததாக மோசடி, தொழிற்சாலைகளில் கணினி மூலம் முக்கிய ஆவணங்களைத் திருடுவது உள்பட 550 வகையான "சைபர்” குற்றங்கள் உள்ளன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இக் குற்றச்செயல்கள் நைஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டதால் இது "நைஜீரியன் ஸ்கேம்” என்றாகிவிட்டது. தற்போது, இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. "பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள், தகவல் தொழில்நுட்பம் படித்து வேலை கிடைக்காத இளைஞர்கள், மும்பையில் மர்மக் கும்பலுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அங்கிருந்து தமிழகம் முழுவதும் "சைபர்” குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக மாநகரக் குற்றப்பிரிவு போலீஸôர் தெரிவிக்கின்றனர்.
கண்டுபிடிக்கப்படாத 20 வழக்குகள்: சென்னையில் "சைபர்” குற்றங்களைத் தடுக்க தனிப்பிரிவு உள்ளது. ஆனால், கோவையில் இப் பிரிவு பெயரளவுக்கே செயல்படுகிறது. இதற்கான உபகரணங்களோ, தனியாக போலீஸôரோ இல்லை.
"சைபர்” குற்றங்கள் தொடர்பாக கோவையில் கடந்த ஓராண்டில் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு வழக்குகளில்கூட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
50-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் மீது வழக்குப் பதியவில்லை. போலீஸôருக்கு முறையான பயிற்சி அளித்தால் மட்டுமே "சைபர்” குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும் என்கிறார் சைபர் சொசைட்டி கணினி மைய உரிமையாளர் ரவிச்சந்திரன்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்