முகமது சதக் கல்லூரிகளின் சார்பில் கீழக்கரையில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு பேச்சு
கீழக்கரை, மார்ச்.13-
முகமது சதக் கல்லூரிகளின் சார்பில் கீழக்கரையில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
நபிகள் நாயகம் பிறந்த நாள்
முகமது சதக் அறக்கட்டளையினர் சார்பில் கீழக்கரையில் இயங்கி வரும் என்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐ.டி.ஐ. பயிற்சி மையம், செய்யது ஹமீதா அரபி கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் சார்பில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
முகமது சதக் அறக்கட்டளை தலைவர் டாக்டர்.எஸ்.எம். ஹமீது அப்துல்காதர் தலைமை தாங்கினார். முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்றார். முகமது சதக் அறக்கட்டளை செயலாளர் எஸ்.எம்.கபீர் முன்னிலை வகித்தார்.
இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான சென்னை மதரசத்துன் நிஸ்வான் செயலாளர் மவுலானாமுகமது உமர், தஞ்சாவூர் ராஜகிரி தாவூது பாசா கல்லூரி பேராசிரியர் சர்புதீன் ஆலிம், பெரும்புலவர் எச்.முஸ்தபா ஆகியோர் மீலாது விழாவின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்கள்.
நெய் சோறு விருந்து
விழாவில் முகமது சதக் அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர் பி.ஆர்.எல்.சேக்அபூபக்கர் ஹாஜியார், கல்வி நிறுவனங்களின் சிறப்பு இயக்குனர் எஸ்.எம்.ïசுப், இயக்குனர் பைசல்அப்துல்காதர், ஏ.ஜெ.ஹபீபு முகமது சதக்கத்துல்லா, தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன், என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் செய்யது அபுதாகீர், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி, பள்ளி கூட தாளாளர்கள் டி.எஸ். ஹமீது, டாக்டர் சாதிக், ïசுப்சுலைகா மருத்துவமனை டாக்டர் செய்யது அப்துல்காதர், வேளாண் விஞ்ஞானி அகமது புகாரி உள்பட பலர் கலந்து கொண்டார்கள். பாலிடெக்னிக் துணை முதல்வர் நவநீத ராஜன் நன்றி கூறினார்.
முன்னதாக நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவையொட்டி கீழக்கரையில் உள்ள சதக் அவென்ï வளாகத்தில் முகமது சதக் அறக்கட்டளையினரின் சார்பில் 12 நாட்கள் நபிகள் நாயகத்தின் புகழ் பாடல்களை படிக்க கூடிய மவுலீது ஓதப்பட்டது. நிறைவு நாள் அன்று பல்லாயிரக்கணக்கானோருக்கு நெய் சோறு விருந்து வழங்கப்பட்டது.
AdiraiPost
கீழக்கரை
நபிகள் நாயகம்
பிறந்த நாள்
முகமது சதக் கல்லூரி
விழா
முகமது சதக் கல்லூரிகளின் சார்பில் கீழக்கரையில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்