Breaking News
recent

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இ.அஹமது-இ.டி. முஹம்மது பஷீர் வேட்பு மனு தாக்கல்

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இ.அஹமது-இ.டி. முஹம்மது பஷீர் வேட்பு மனு தாக்கல்

http://www.muslimleaguetn.com/news.asp?id=748

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சருமான இ.அஹமதுவும், கேரள மாநில முஸ்லிம் லீக் செயலாளரும், முன்னாள் கல்வி அமைச்சருமான இ.டி. முஹம்மது பஷீரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

கேரளாவில் உள்ள 16 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 16ம் தேதி வாக் குப் பதிவு நடக்க இருக்கி றது. அதில், மலப்புரம் தொகுதியிலிருந்து போட்டியிடுவதற்காக இ. அஹமது மனு தாக்கல் செய்தார். இ.டி. முஹம்மது பஷீர் பொன்னானி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

இவர்களைத் தவிர வயநாடு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷாஹ் நவாஸும், எர்ணாகுளம் தொகுதியில் இருந்து போட்டியிட கே.பி. தாமஸஸும் மனு தாக்கல் செய்தார்கள்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர்களும், தற்போதைய மக்களவை உறுப்பினர்களுமான கே.எஸ். மனோஜ் ஆலப்புழை தொகுதியிலும், பி. ராஜேந்திரன் கொல்லம் தொகுதியில் போட்டியிடவும் மனு தாக்கல் செய்தார்கள்.

கேரள காங்கிரஸ் கட்சியைச் சேர்நத் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ் இடிக்கி தொகுதியில் போட்டியிடவும் மனு தாக்கல் செய்தார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.