திருவிதாங்கோடு கல்லூரியில் விளையாட்டு விழா
தக்கலை, மார்ச் 10: கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு ஓட்டப் பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு, வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு முஸ்லிம் கல்வி அறக்கட்டளைத் தலைவர் எஸ். செய்யது முகமது தலைமை வகித்தார்.
கல்லூரிச் செயலர் எச். முகமது அலி, கல்லூரி முதல்வர் வி. எபனேசர், இணைச் செயலர் முகமது பெரோஸ்கான், நிர்வாகக் குழு உறுப்பினர் நிஜாமுதீன், பேராசிரியர் தனிஸ்லாஸ், தமுமுக மாவட்டத் தலைவர் காதர்மைதீன், பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு நாகர்கோவில் எம்.பி. ஏ.வி. பெல்லார்மின் தங்கப் பதக்கங்கள், பரிசுகளை வழங்கிப் பேசினார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்