முஸ்லிம் மக்கள் கழகம் ஆலோசனை
திண்டிவனம், மார்ச் 28: திண்டிவனத்தில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
நகரச் செயலாளர் அ.சையத் அமீர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகரத் தலைவர் அ.சாதிக் பாஷா, நகர இளைஞர் அணித் தலைவர் அ.அசேன்அலி, நகர அமைப்பு செயலர் மு.க.இஸ்மாயில் முன்னிலை வகித்தனர்.
நகர மகளிரணி அமைப்புச் செயலர் ஜ.ஷாஹின் வரவேற்புரை நிகழ்த்தினார். கட்சியின் மாநிலத் தலைவர் ச.சு.ஜைனுதின் சிறப்புரையாற்றினார்.
அதிமுக கூட்டணி கட்சிக்கு ஆதரவாக 40 தொகுதிகளிலும் தமது கட்சி ஆதரவு தெரிவிப்பதாகவும், அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக நிறுவனர் ராமதாஸýக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், பூம்பூம் மாட்டுக்கார இனமக்களுக்கு வாக்களர் அட்டை வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்