துபாயில் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவன புதிய கட்டிட திறப்பு விழா
துபாயில் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவன புதிய கட்டிட திறப்பு விழா
துபாயில் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் ( ) கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதிய கட்டிடத்தை துபாய் துணை ஆட்சியாளர் ஷேக் மக்தூம் பின் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கமல்நாத், அமீரக உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சித்துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இப்புதிய கட்டிடம் 225,000 சதுர அடியில் துபாய் சர்வதேச கல்வி நகரில் அமையப்பெற்றுள்ளது. இந்தியாவின் உயர்தர கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் அமீரகத்தில் உள்ள மாணாக்கர்களை கவர்ந்து வருகிறது.
விழாவில் டாக்டர் பர்ஹத் ராட், டியூக் பல்கலைக்கழக டீன் பிளேர் ஹெச். ஷெப்பர்டு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்