
புதுதில்லி, செப்.1- ஜின்னா குறித்து தான் எழுதிய புத்தகம் தடை செய்யப்பட்டதை எதிர்த்து ஜஸ்வந்த் சிங் பதிவு செய்த வழக்கில் குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான விசாரணை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜஸ்வந்த் சிங்கின் புத்தகம் தடை செய்யப்பட்டது குறித்து குஜராத் மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அல்டமாஸ் கபீர், சிரியக் ஜோசப் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு இன்று உத்தரவிட்டது.
ஜஸ்வந்த் சிங் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் சோலி சோரப்ஜி, ஃபாலி எஸ். நாரிமன் ஆகியோர் வாதாடினர். ஜின்னா புத்தகத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அதன் எழுத்தாளர் மற்றும் பதிப்பாளரின் அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது என்று அவர்கள் தங்கள் வாதத்தில் குறிப்பிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்