(வாசக சகோதரர் அனுப்பித்தந்த மின் மடல்)
ஏகஇறைவனின் திருப்பெயரால்...
வெளிநாடுகளிலிருந்தும், வளைகுடா நாடுகளிலிருந்தும் (அதிகமாக வளைகுடா நாடுகள்) ஹஜ்ஜூக்கு அழைத்துச் செல்லும் ஹஜ் குரூப் நிருவனங்கள் ஹஜ் யாத்ரீகர்களை மினாவில் தங்க வைக்காமல் அதற்கு பக்கத்தில் உள்ள அஜீஸியா எனும் இடத்தில் தங்க வைத்து இரவின் இறுதிப்பகுதியில் அழைத்து வந்து மினாவில் ஒண்றிரண்டு மணிநேரம் தங்கவைத்து கல்லெறிய அழைத்துச் செல்கின்றனர் .
ஹஜ்ஜூடைய கிரியைகளில் இவ்வாறு செய்தால் ஹஜ் கூடுமா ?
அன்றைய தினம் லுஹர்இ அஸர்இ மஃரிப்இ இஷா ஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் ஃபஜ்ரு தொழுகைகளையும் மினாவிலேயே நிறைவெற்ற வேண்டும் நூல் : முஸ்லிம் 2137
எட்டாம் நாள் லுஹர் தொழகையையும் அதற்கடுத்த அரஃபா நாளின் ஃபஜ்ரு தொழுகையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் தொழுதார்கள் அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். நூல்கள்: அபூதாவூத் 1632, 1634, அஹ்மத் 5856.
பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்லி செய்து காட்டிய நபிவழியை பணம் பண்ணுவதற்காக மாற்றி அமைக்கலாமா ? சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்