Breaking News
recent

வெளி வருமா உண்மை,இல்லையெனில் மூழ்கிடுமா?

தேக்கடி ஏரியில் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி ஜலகன்யகா என்ற படகு கவிழ்ந்தது. இவ்விபத்தில் 45 சுற்றுலாப் பயணிகள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து கேரள அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இந் நிலையில், கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் செரியன் பிலிப் வெள்ளிக்கிழமை போலீஸôரிடம் வாக்குமூலம் அளிக்கையில், "விபத்தில் கவிழ்ந்த படகு வாங்கியதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை. அது தொடர்பான பணியில் தனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. கொள்கை விஷயங்களில் மட்டுமே எனக்குப் பொறுப்பு உண்டு. அரசு உத்தரவுப்படி சுற்றுலாத் துறை தான் படகு வாங்க டெண்டர் விடுத்தது. அதைக் கட்ட ஒப்பந்தமும் வழங்கியது என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே செரியன் பிலிப் சனிக்கிழமை கூறியதாவது:

ஜலகன்யகா படகு வாங்கியதில் ஊழல் ஏதும் நடைபெற்றுள்ளதா? என விசாரணை நடத்த வேண்டும். இதில் கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அல்லது சுற்றுலாத் துறையின் எந்த ஒரு அதிகாரியாவது முறைகேடு ஏதும் செய்திருந்தால், அவரை ஊழல் வழக்கில் சேர்க்க வேண்டும்.

தரமற்ற பைபர் மூலம் படகு கட்டப்பட்டுள்ளதாக தடயவியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த சந்தேகத்தை விசாரணை மூலம் தெளிவுபடுத்த வேண்டும்.

தேக்கடி அணையில் படகுகளை இயக்க கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அனுமதி பெற்றிருக்கவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தேக்கடியில் படகுகளை இயக்க அனுமதி பெறத் தேவையில்லை என 1984-ம் ஆண்டு அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கடந்த 43 ஆண்டுகளாக தேக்கடியில் வனத்துறை அனுமதியுடன் 5 படகுகளை இயக்கி வருகிறது என்றார்.
crown

crown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.