Breaking News
recent

வெளுத்தது காவிகளின் சாயம்-போடுறாங்க கரிசன வேசம்.

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் கொடுக்க கூடாது என்று பா.ஜ.க. தமிழகத் துணைத் தலைவர் எச். ராஜா கூறினார்.

இலங்கையில் தமிழ் இனமே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வரும் ராஜபக்ஷவுக்கு துணை போவதற்கு இந்த நிலைப்பாடு சாதகமாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் இல. கணேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் அமைத்து தர வேண்டும்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கடந்த 10 மாதங்களாக தாக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல உள்ளது. சோனியா காந்திக்கு தமிழர்கள் மீதுள்ள வெறுப்பு காரணமாகவே, இலங்கைக்கு, மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது என்றார் அவர்.

செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் மேலும் கூறியது:

இலங்கையில் மின் முள்வேலிக்குள் அடைபட்டிருக்கும் தமிழர்களின் நிலை குறித்து அறிய பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி. குழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் பாதுகாப்பு கருதி கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என்றார் எச். ராஜா.
(ஈழத்தமிழர்களின் மேல் அக்கறை இருப்பதுபோல் காட்டிக்கொண்ட இந்த மதவாதிகள். நிலவை காட்டி சோறுட்டும் தாய் போல் கரிசனம் காட்டுவதுபோல் வார்தை ஜாலம் காட்டி ஏமாற்றும் வித்தைதான் இலங்கையில் குடியமர்த்துவது என்பது நம் தமிழின மேல் யாருக்கும் உண்மை கரிசனம் கிடையாது என்பதே நிதர்சன உண்மை
crown

crown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.