ஐடி துறையில் 2.5 லட்சம் புதிய வேலைகள்!

ஐடி துறையில் அடுத்த ஆண்டுக்குள் 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஐடி துறையின் இரண்டாவது பெரிய நிறுவனமான இன்போஸிஸ் தெரிவி்த்துள்ளது.


மேலும் 20000 புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் மோகன்தாஸ் பை கூறுகையில், ஐடி துறையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 3 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன.2007ம் ஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமான வாய்ப்புகள் இருந்தன.


கடந்த 18 மாதங்களில்தான் நிலைமை இத்தனை மோசம். இப்போது மீண்டும் மறு எழுச்சிக்கான காலம். அடுத்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே நல்ல மாறுதல்களைக் காணலாம்.


2.5 லட்சம் புதிய பணியாளர்கள் இந்தத் துறையில் தேவைப்படுவார்கள். இன்போஸிஸ் மட்டுமே 20000 புதிய பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டு, அதற்கான பூர்வாங்க வேலைகளில் இறங்கியுள்ளதுஎன்றார்.
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.