Breaking News
recent

வெப்துனியாவில் பணிவாய்ப்பு

இந்தூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வெப்துனியா.காம் நிறுவனத்தின் சென்னை கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஆங்கிலத்தை சரியாகப் புரிந்து கொண்டு அதனைத் சொற்பிழை, வாக்கியப் பிழையின்றி தமிழில் எழுதும் திறன் பெற்றிருப்பதுடன், சிக்கலான ஆங்கில வாக்கியங்களை எளிமையாக மொழிபெயர்க்கும் திறனும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் துறையில் (தமிழ்) முன்அனுபவம் இருப்பது கூடுதல் தகுதியாகும்.

சிக்கலான பத்திகள் மற்றும் ஆங்கில கூட்டு வாக்கியங்களைப் புரிந்து கொள்ளும் திறன், அடிப்படை கணினி அறிமுகம் (MS Office, Windows XP), தமிழ்/ஆங்கில அடிப்படைத் தட்டச்சு பயிற்சி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கூடுதல் தகுதிகள்:

* மொழிபெயர்ப்புத் துறையில் முன் அனுபவம்.

* தமிழ் தட்டச்சு அனுபவம்.

* தொழில்நுட்ப, மருத்துவ ஆவணங்களை மொழிபெயர்த்த அனுபவம் அல்லது மொழிபெயர்க்கும் திறன்

* தமிழ் வலைத்தளங்கள் பார்த்தல், வலைப்பதிவு எழுதுதல் போன்றவற்றில் பழக்கம்.

* தமிழ் யுனிகோட், ஃபாண்ட் தொடர்பான அறிதல்

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (மொழி பட்டப்படிப்பு கூடுதல் தகுதி).

Translator: M / F, age no bar, qualified, fresh / Experienced, to translate English to Tamil, Salary: Commensurate with Talent and Experience.

Contact: HR - Webdunia.com (India) Pvt. Ltd. Phone: 044- 2372 4781 (5 Lines), Fax: +91-44-2372 4769. Mail: murugesan.paulraj@webdunia.net
Thanks : webdunia.com
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.