Breaking News
recent

எதிலும் பாரபட்சம்

சூரத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உடல்நிலை தொடர்பாக அவதூறாக எஸ்.எம்.எஸ்., செய்தியை பரப்பிய இரண்டு பேரை, அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர்கள் நிரவ் ரானா மற்றும் உமேஷ் ஜெயின். இவர்களில் ரானா, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி உடல்நிலை பற்றி, அவதூறாக எஸ்.எம்.எஸ்., செய்தியை பரப்பி உள்ளார். இதைத் தொடர்ந்து, நிரவ் ரானாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது நிரவ் ரானா கூறுகையில், "நான் அனுப்பிய எஸ்.எம்.எஸ்., தகவல்களை உமேஷ் ஜெயின் எனக்கு அனுப்பினார். அதை நான் மற்றவர்களுக்கு அனுப்பினேன்.
முதல்வர் பற்றி, எவ்வாறான எஸ்.எம்.எஸ்., தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்பதை மக்கள் அறிந்து கொள்ளவே, அந்த எஸ்.எம்.எஸ்.,களை மற்றவர்களுக்கு அனுப்பினேன்' என்றார். நிரவ் ரானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, உமேஷ் ஜெயினை போலீசார் கைது செய்தனர். நிரவ் ரானா மற்றும் உமேஷ் ஜெயின் இருவர் மீதும் மதம், இனம், பிறந்த இடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டு பிரிவினர் இடையே விரோதத்தை தூண்டியது, மதச்சார்பின்மைக்கு எதிராக நடந்தது மற்றும் தீய நோக்கத்துடன் செயல்பட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதே போன்று முன், மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யாக தேவி கைது செய்யப்பட்ட போது, கையெழுத்து பிரசாரம் மற்றும் சில எஸ்.எம்.எஸ்.,கள் அனுப்பியது சம்பந்தமான செய்திகளில், நிரவ் ரானாவின் பெயர் ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது. மோடிக்கு சமீபத்தில் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, வீட்டில் தனியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர், இப்போது முழு உடல் நலத்துடன் மீண்டும் பணிகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில், திட்டமிட்ட வதந்தியை கிளப்புவோரை கடுமையாக தண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்மாக இருந்திருந்தால் தீவிரவாதி!மற்றவர்களாக இருந்ததனால் சாதாரண குற்றவாளி! இதுதான் காவிகளின் ஆட்சியின் அவலம்.
crown
crown

crown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.