ஓர் அரசு சிறுபான்மையினரை பாதுகாக்கவில்லை என்றால் அந்த அரசு ஆபத்தை எதிர் நோக்குகிறது என்றே பொருளாகும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் முன்னணி மார்க்க நிலையமான தாருல் உலூம் தேவ்பந்த்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சியில் பேசும் போது இவ்வாறு உரையாற்றியுள்ளார். மதவெறியின் காரணமாகவே பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. இது தவறான முன்னுதாரணமாகும்.
இது மிகவும் வருந்தத்தக்க ஒன்று மதத்தில் பேரிலான வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டும். பெரும் பான்மை இன மக்கள் சிறுபான்மையினரை பாதுகாக்க வேண் டும். ஓர் அரசு சிறுபான்மையினரை பாதுகாக்கவில்லை எனில் அது ஆபத்தை எதிர் நோக்குகிறது என்றே பொருளாகும்.
எனவேதான் தமிழர்களுக்கு உரிய உரிமை வழங்கும் படி இலங்கையையும், இந்திய மாணவர்களை பாதுகாக்கும்படி ஆஸ்திரேலியாவையும் கோரி வருகிறோம் என்றும் உள் துறை அமைச்சர் தெரிவித்தார். இஸ்லாம் ஒருபோதும் வன் முறையை ஏற்கவில்லை. அமைதியை மட்டுமே இந்த மார்க் கம் போதிக்கிறது.
பயங்கரவாதத்தை நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களும் எதிர்க்க வேண்டும். இஸ்லாம் இந்த மண்ணிற்கு அன்னிய மதமல்ல. அவ்வாறு இங்கு யாரும் கருதவும் இல்லை. முஸ்லிம்களை இந்திய குடிமக்களாகத் தான் பார்க்கிறோம். இது உங்கள் முன்னோர் வசித்த பூமி. இதனால்தான் நீங்கள் இங்கு பிறந்தீர்கள், வாழ்கிறீர்கள்.
வன்முறை மதநல்லிணக்கத்திற்கு எதிரானது. மதவெறி அரசியல் சுதந்திரத்திற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. விடுதலைப் போரட்டக் காலத்தில் முஸ்லிம் தலைவர்கள் பாடுபட்டதை யாரும்
மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
-சர்ஜுன்
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்