புதிதாக ரேஷன் கார்டு பெற வேண்டும் என்றால் தனியாக சமையலறை இருக்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய நிபந் தனையை விதித்துள்ளது.
புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பவர்கள் தங்கள் பெயர் ஏற்கனவே ஒரு ரேஷன் கார்டில் இருந்தால் அதில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட சான்றிதழையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்திருந்தது.
இதன்படி விண்ணப்பித் தவர்களுக்கு வழங்கல் துறையினர் ஆவணங்களை சரிபார்த்து புதிய ரேஷன்கார்டுகளை வழங்கி வந்தனர்.
தற்போது புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு தமிழக அரசின் நுகர்பொருள் வழங்கல் துறையின் ஆணையர் ராஜாராமன் புதிய நிபந்தனை யினை அறிவித்துள்ளார். அதன்படி புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களின் வீட்டில் தனி சமையலறை இருக்க வேண்டும்.
இதனை வழங்கல் துறை அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னரே புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவரின் பெயர் ஏற்கனவே அவர் பெயர் உள்ள ரேஷன் கார்டில் இருந்து நீக்குவதற்கு சான்றிதழ் வழங்க வேண்டும்.
தனி சமையல் அறை இல்லாதவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க அனுமதி கிடையாது. இதில் முறை கேடுகள் ஏதும் நடந்தால் சம்பந்தப்பட்ட வழங்கல் துறை அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நிறைய வீட்டில் இடப்பற்றாக்குறையால் நேரம் ஒதுக்கி ஒரே சமையல் அறையில் சமைக்கிறார்கள்;
பதிலளிநீக்குஇதில் முறைக்கேடுகளும் இலஞ்சமும் விளையாடக்கூடும். எனவே, அரசு மறு யோசனை செய்ய வேண்டும்- Jaffar