Breaking News
recent

அதிராம்பட்டினம்: அலையாத்தி காடுகளில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!

அதிராம்பட்டினம்: அலையாத்தி காடுகளில் இரவு நேரங்களில் வெளி நாட்டு பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் அலையாத்தி காடுகளுக்கு ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மலேசியா, ஆஸ்திரேலியா, பர்மா, இலங்கை, பாகிஸ்தான், மங்கோலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன.


நத்த கொத்தி நாரை, சாம்பல் நாரை, செங்கால் நாரை, குளக்கிடா, மயில் கால் சிறவி, பனங்கொட்டை சிறவி, பவளக்கால் உள்ளான், நாமக்கோழி என 200 பறவை இனங்கள் இந்தாண்டு வந்துள்ளன.

அலையாத்தி காடுகளில் நிலவும் இதமான குளிர்ந்த தட்பவெப்பநிலைக்காகவும், கடலுக்கு அருகாமையில் சதுப்பு நிலப்பகுதியில் காடுகள் அமை ந்துள்ளதாலும், இனப்பெருக்கத்துக்கு ஏற்ற இடம் என்பதாலும் பறவைகள் இங்கு வருகின்றன.


அலையாத்தி காடுகளில் இரவு நேரங்களில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வனச்சரகர் நல்லுச்சாமி தலைமையில் வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்பறவைகள் சில நேரங்களில் அருகே உள்ள வயல்பகுதிகளுக்கு செல்கின்றன. அப்போது பற வைகளை வலை வைத்து பிடிக்க வாய்ப்புண்டு.


எனவே அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள மங்கனங்காடு, ராசியன்காடு, பேக்காளிக்காடு, கருங்குளம், கரிசன்காடு, மஞ்சவயல், தம்பிக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இப்பகுதிகளில் கடந்த 27,28ம் தேதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பறவைகளை வேட்டையாடுவதற்காக வயல்களில் வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட வலை கள் கைப்பற்றப்பட்டது. பறவைகளை வேட்டையாடுபவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று வனச்சரகர் நல்லுச் சாமி எச்சரித்துள்ளார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.