Breaking News
recent

செக்ஸ் வெப்சைட் தெரிவித்தால் பரிசு!

பெய்ஜிங் : சீனாவில் இளைஞர்களைக் கெடுக்கும் செக்ஸ் வெப்சைட்களை காட்டிக் கொடுத்தால் அதிகபட்சம் ரூ.68,000 பரிசு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் இன்டர்நெட் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இளைஞர்கள், மாணவ &மாணவிகள் சைபர் கபேக்களிலும், செல்போன்களிலும் அதிக நேரம் இன்டர்நெட் பார்க்கின்றனர். அவற்றில் பெரும்பாலோர் செக்ஸ் வெப்சைட்களை பார்ப்பதாக தெரிய வந்தது.

எனவே, செக்ஸ் வெப்சைட்களை பார்க்கும் இளைஞர்கள் மூலமாகவே அந்த சைட்களை தடை செய்ய திட்டமிட்டனர். வெப்சைட்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.7,000 முதல் ரூ.68,000 வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் 500 போன் அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அருமயான நடைமுறையை இந்தியாவும் பின்பற்றலாமே...?

எங்களுக்கு பரிசுகள் கூட வேண்டாம் சனியன் ஒழிந்தால் சரி...

இதுப்பற்றி யாரிடம் புகார் கொடுப்பது தெரிந்த வாசகர்கள் தகவல் தரலாமே!
Unknown

Unknown

1 கருத்து:

  1. கலிகாலத்தின் அனாச்சாரம்,விபச்சரத்தின் வாசல் இந்த பாலியல் இணையத்தள தடை யோசனையை கலசாரத்தின் அச்சாரம் எனச்கொல்லிக்கொள்ளும் நம் அரசாங்கம் எப்பொழுது நடைமுறைப்படுத்தப்போகிறது?

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.