Breaking News
recent

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு!

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு சென்னை அருகே சோழிங்க நல்லூரில் (13/12/09ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 2-ஆவது மாநில மாநாடு சென்னை அருகே சோழிங்-கநல்லூரில் உள்ள முகமது சதக் கலை அறிவியல் கல்லூரியில் நாளை-(ஞாயிற்றுக்கிழமை) நடை-பெற உள்ளது. மாநாடு காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

கேப்டன் அமீர் அலி தலைமை தாங்குகிறார். ஆய்வுக்கோவைகளை பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. வெளியிடுகிறார். அதை நகைக்கடை அதிபர் எல்.-கே.எஸ்.சையது அகமது பெறுகிறார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன் ‘‘இலக்கியச் சுடர்’’ விருதை வழங்குகிறார்.

மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது. இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச்செயலாளர் எஸ்.எம்.ஹிதாயத்துஅல்லாஹ் தலைமை தாங்குகிறார். ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டு ரூ. ஒரு லட்சம் பொற்கிழியுடன் கூடிய உமறுப்புலவர் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கு வழங்குகிறார்.

மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை நெல்லை சதக் அப்துல்லாஹ் கல்லூரி தலைவர் டி.இ.எஸ்.பத்ஹூர் ரப்பானிக்கும், சதக் கல்லூரி தலைவர் எஸ்.எம்.ஹமீது அப்துல் காதருக்கும் வழங்குகிறார். 11 பேருக்கு சமுதாய சுடர் விருதுகளை சபாநாயகர் ஆவுடையப்பன் வழங்குகிறார். கவிக்கோ அறக்கொடை நிதியை துபாஷ் தாஜுதீனுக்கு நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி வழங்குகிறார். 15 பேருக்கு இலக்கியச் சுடர் விருது கொடுக்கப்படுகிறது.

விழாவில் இஸ்லாமிய இலக்கிய கழக துணைத்தலைவர் பிரசிடென்ட் அபு-பக்கர் எஸ்.அய்.இ.டி. கல்லூரிக்கு ரூ. ஒரு லட்-சம் வழங்கி அதை அவரது பெயரில் தமிழ் ஆய்வுக்காக அறக்கட்டளை தொடங்கப்படுகிறது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.