Breaking News
recent

செல்போன் தகவல்கள்!

கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பது போல் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் முதல் கழனியில் வேலை செய்கிறவர்கள் வரை அனைவரிடமும் நீக்கமற நிறைந்திருப்பது செல்போன். அதில் இசை, இலக்கியம், சினிமா, விளையாட்டு என நமக்கு வேண்டிய விபரங்களை நிமிடத்தில் பெறலாம். அவசர காலத்தில் உயிர்காக்கும் தோழனாய் விளங்கும் செல்போனின் சில சிறப்பு சேவைகளை எப்படி பயன்படுத்துவது என காண்போம்.

1.உலகளவில் அவசர கால அழைப்புக்கு 112 என்ற எண் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக வைத்துக் கொள்ளு-வோம். ஆபத்தான நேரங்களில் 112 எண்ணை அழைத்தால், அருகிலுள்ள தொடர்பு எல்லையின் அவ-சர-கால எண்ணை அறியலாம். உங்களின் செல்போன் பூட்டப்பட்டிருந்தாலும் 112 என்ற எண்ணை அழைக்கலாம்.

2. உங்கள் கார் ரிமோட் மூலம் இயங்குவதா? உங்களுக்கான சேவை இது. மறதியாக காரைப் பூட்டிவிட்டீர்கள். மாற்று சாவி வீட்டில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். உங்கள் செல்போனில் இருந்து வீட்டிலிருக்கும் யாரேனும் ஒருவரின் செல்லுக்கு அழையுங்கள். உங்களின் செல்லை காரிலிருந்து ஒரு அடி தள்ளி வைத்துக் கொண்டு வீட்டில் உள்ள ரிமோட்டை அவரின் செல்லுக்கு அருகில் வைத்துக் கொண்டு பட்டனை அழுத்தச் சொல்லுங்கள். உங்கள் காரின் மாற்று சாவியை எடுத்துக் கொண்டு டென்சனுடன் ஒருவர் வர தேவையில்லை. நீங்கள் வீட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கணநேரத்தில் கதவை திறந்து கானம் கேட்கலாம்.

3.செல்லில் பேட்டரி குறைவாக இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம். *3370# என்று அழுத்தினால் செல்லில் 50% பேட்டரி அதிகரிக்கும். அடுத்து எப்போது சார்ஜ் செய்கிறீர்களோ அப்போது இந்த 50% வீதமும் சார்ஜ் ஆகிவிடும்.

4.உங்கள் செல்லின் வரிசை எண்ணை அறிய *#06# என அழுத்தினால் 15 இலக்க எண்ணை காணலாம். அதை பேப்பரில் எழுதி பத்திரப்படுத்துங்கள். வெவ்வேறு செல்லுக்கு வெவ்வேறு எண் உள்ளது. யாரேனும் செல்லை திருடி விட்டால் உங்கள் போனின் நிருவாகத்துக்கு அழைத்து இந்த எண்ணை சொல்லுங்கள். அவர்கள் உங்கள் போனின் சேவையை நிறுத்திவிடுவார்கள். செல்லை திருடியவர்கள் சிம்-கார்டை மாற்றினாலும் அதை உபயோகிக்க முடியாது. எல்லோரும் இந்த முறையை பின்பற்றினால் செல்போன் திருட்டை ஒழித்துவிடலாம்.

5. விபத்து போன்ற நேரங்களில் அருகிலுள்ள மருத்துவமனை எண்ணை அறிய அழைத்தால் $1.00 முதல் $1.75 வரை செல்போன் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. டெலிபோன் டைரக்டரிக்காக 411 அழைப்பதற்கு பதில் (800) 411 அல்லது (800)373-3411 (800)373-3411 மூலம் கட்டணமின்றி விபரம் அறியலாம்.

6.உங்கள் பாக்கெட் மணியை குறைத்த செல்போன், பாக்கெட் மணி தரலாம். எப்படி என அறிய .. என்ற இணையதளத்தில் உங்களை பற்றிய விபரங்கள், பிடித்த துறை போன்றவற்றை பதிவு செய்யுங்கள். அந்த துறை தொடர்பான விளம்பரங்களை செல்போனில் படிப்பதன் மூலம் 20பைசாவும், அதை யாருக்கேனும் அனுப்பினால் 10 பைசாவும், அவர்கள் யாருக்கேனும் அனுப்பினால் 5 பைசாவும் பெறலாம். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை போன்பில் கட்ட பயன்படுத்தலாம். ஏனுங்க எல்லாரும் எங்க கிளம்பிட்டிங்க? உங்க போனில் இதெல்லாம் இருக்குதானு பாக்கிறீங்க. இல்லாட்டி இப்பவே வாங்கிடுங்க.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.