Breaking News
recent

அவசியம்,மறவாதீர்

நாளை தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

போலியோவை முற்றிலும் ஒழிப்பதற்காக அரசு சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நாளை மற்றும் அடுத்த மாதம் 7 ஆகிய 2 நாட்கள் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

சொட்டு மருந்து வழங்குவதற்காக 40 ஆயிரத்து 399 சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு மையங்கள், அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதர நிலையங்கள், சத்து ணவு மையங்கள், பள்ளிக் கூடங்கள் மற்றும் முக்கியமான பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்கள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, முகாம் நாட்களில் பயணம் மேற் கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவர்களும் தங்களது மருத்துவ மனைகளில் முகாம் நாட்களின் போது இலவசமாக சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 70 லட்சம் குழந்தைகள் இதன் மூலம் பயன் பெறுவார்கள். இப்பணியைச் சிறப்பாகச் செய்ய பல்வேறு அரசுத் துறைகள், ரோட்டரி சங்கம் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் ஈடுபடுகிறார்கள். சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட தற்கான அடையாளம் தெரிந்து கொள்வதற்காக, குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும்.

விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து, அடுத்தடுத்த நாட்களில் சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பெற்றோர் அனைவரும் 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளை போலியோ முகாமிற்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
crown

crown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.