Breaking News
recent

முத்துப்பேட்டையிலிருந்து ஒரு சாதனையாளர்



முஸ்லிம்கள் வாழும் முத்துப்பேட்டை என்றதும் நினைவுக்கு வருவது மத கலவரங்களும் தர்காக்களும். ஆனால் முத்துப்பேட்டையில் முஸ்லிம் சுகந்திர போராட்ட தியாகிகளும் தலை சிறந்த கல்வியாளர்களும், இஸ்லாமிய தலைவர்களும்,சிறந்த கவிஞர்களும் அரசியல்வாதிகளும் பேச்சாளர்களும் வாழ்ந்து வருகின்றனர் . இதை தொடர்ந்து விளையாட்டு துறைளும் முத்துபேட்டை சேர்ந்த சகோதரர் முஹம்மது இதிரிஸ் சாதனை படைத்துள்ளார்

முத்துபேட்டையை சேர்ந்த சகோதரர் முஹம்மது இதிரிஸ் இரும்பு மனிதர் (IRON MAN என்கிற விளையாட்டு சவாலில் பங்குபெறும் முதல் இந்தியர் ஆவார்..



கலைமாமனி H.முகம்மது ரெஜிஸ் கான் (வின்னர்ஸ் மெட்டிக்குலேஷன் ஸ்கூல் ) அவர்களின் மகன் M.முஹம்மது இதிரிஸ் தனது பட்ட படிப்பை முடித்துவிட்டு கடந்த 14 வருடமாக பக்ரைனில் வேலை பார்த்து வருகிறார் கடந்த 2002 லி ருந்து ( இரும்பு மனிதர் என்கிற விளையாட்டு) போட்டில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது கடந்த 8 வருட கடின உழைப்பால், உலக அலவில் வீரர்கள் பங்குபெறக்கூடிய இருன்பு மனிதன் விலையாட்டில் இந்த வருடம் மலேசியாவில் நடைபெற உள்ள ( இரும்பு மனிதர் என்கிற விளையாட்டில்) பங்குபெறும் முதல் இந்தியன் என்ற பெருமையை முஹம்மது இதிரிஸ் பெற்றுள்ளார் .

குறிப்பாக இரும்பு மனிதர் என்கிற விளையாட்டு மேற்கிதிய நாடுகளில் பிரபலமான ஒன்று . இந்த விளையாட்டின் விதிமுறை 3.8 கி .மி நீச்சல் அடிக்கவேண்டும் பிறகு 180 கி மி சைக்கிளை ஓட்ட வேண்டும் அதை தொடர்ந்து 42.2 கி மி ஓடவேண்டும் இவை எல்லாவற்றையும் அதிக பட்சமாக 17 மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும் .

முஹம்மது இதிரிஸ் பக்ரைன் விளையாடு கழகம் எற்பாடு செய்த விளையாட்டில் கலந்து கொண்டு கடந்த 3 வருடங்களாக வெற்றி பெற்று விருதுகளை குவித்துள்ளார் . 2004 மற்றும் 2005 ஆண்டுகளில் முஹம்மது இதிரிஸ் அவர்களின் முன்னேற்றத்தை கண்ட பக்ரைன் விளையாடு கழகம் விருதுகளை வழங்கி ஊக்குவித்தது

இந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொண்டு நிச்சியம் வெற்றி பெறும் நம்பிகையில் உள்ளார்

முஹம்மது இதிரிஸ்க்கு www.muthupet.org இணையத்தளம் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்

முஹம்மது இதிரிஸ்க்கு வாழ்த்து தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
Tel. +973 3655 3313
email: idris968@yahoo.com

தொகுப்பு:- www.muthupet.org இணையத்தளம்

http://www.youtube.com/watch?v=sxvEoaJc-OM
முத்துப்பேட்டை தகவல்

முத்துப்பேட்டை தகவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.