Breaking News
recent

இந்தியாவில் இங்கிலாந்துக்கான கல்வி விசா நிறுத்திவைப்பு

இங்கிலாந்துக்கான கல்வி விசா கேட்டு விண்ணப்பங்கள் ஏராளமாக குவிந்து வருவதால் டெல்லி, சண்டிகர் மற்றும் ஜலந்தர் ஆகிய மையங்களில் விண்ணப்பங்கள் பெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


எதிர்பாராத வகையில் அளவுக்கதிகமான விசா விண்ணப்பங்கள் வந்துள்ளதால் பிப்ரவரி 1 முதல் புதிய விசா விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது என டெல்லியில் உள்ள இங்கிலாந்து துணைத் தூதர் நிகெல் கேசி மற்றும் இங்கிலாந்து பார்டர் ஏஜென்சி மண்டல இயக்குனர் கிரிஸ் டிக்ஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.


கடந்த 2008ம் ஆண்டில் ஆக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இங்கிலாந்து செல்வதற்கான மாணவர்கள் விசா கேட்டு ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


கடந்த 2009ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 13 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் வந்துள்ளன. குறிப்பாக வட இந்திய பகுதியில் இருந்து விசா விண்ணப்பங்கள் திடீரென அதிகரித்துள்ளன.


இதனால் ஸ்டூடன்ட் விசா நடைமுறை சலுகைகளை தவறாக பயன்படுத்துகிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


ஆனால் எம்மாதிரியான முறைகேடுகள் நடக்ககூடும் என்பது குறித்து இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் எதையும் தெரிவிக்கவில்லை.


எனினும், இந்தியாவில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீக்கப்பட வேண்டியதை உறுதி செய்யும் வகையிலும், உண்மையான கல்விக் காரணங்களுக்காக இங்கிலாந்து செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் புதிய விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்படுகிறது' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி:நக்கீரன்
Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. அதிரை போஸ்ட் என்றாலே செய்திகளை மிகைபடுத்தி கூறுவது தான் என்ற நிலைபாட்டினை தயவு செயுது மாற்றிகொள்ளுங்கள்? லண்டன் ஸ்டுடென்ட் விசா நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாநிலங்கள் டெல்லி,மும்பை கொல்கத்தா போன்ற வடமாநிலங்கள்.இந்த அறிவிப்பு தென் மாநிலங்களுக்கு பொருந்தாது{www.homeoffice.gov.uk} இந்த லிங்கை பயன்படுத்தி உங்களது அறிவிப்பினை சிறிது மாற்றி கொள்ளுங்கள். அன்புடன் உங்கள் அன்பன் ADAMYAKOOB {ad.yakoob@gmail.com}

    பதிலளிநீக்கு
  2. இது நக்கீரன் செய்தி நன்றி நக்கீரன் என்று சுட்டி கொடுக்கப்பட்டுள்ளதே... இதில் எங்கே மிகை?

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.